அ - வரிசை 89 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகமுடையான்

வீட்டுக்காரன்.

அகம்படிமை

உட்டொண்டு.

அகம்பன்

அசைக்கப்படாதவன்;அசைவற்றவன்

அகம்மியர்

அகம்மியை.

அகர்

பகல்.

அகர்த்தனன்

குள்ளன்.

அகர்ம்மணி

சூரியன்.

அகர்ம்முகம்

வைகறை.

அகலக்கட்டை

அகலமற்றது.

அகலப்பா

அகலக்கவி.

அகலிது

விசாலமுடையது.

அகலியாசாரன்

தேவேந்திரன்.

அகலியாநந்தனன்

சதாநந்தன்.

அகல்கை

அகலல்.

அகல்வு

அகலம்
நீங்குகை

அகவ

ஒலியாநிற்க.

அகவடி

உள்ளங்கால்
காலடி
அடிச்சுவடு

அகவலிசை

அகவலோசை.

அகவலுரிச்சீர்

ஈரசைச்சீர்.

அகவற்சீர்

அகவலுரிச்சீர்.