அ - வரிசை 88 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகத்தடியாள் | மனையாள் |
அகத்தியான் | அகத்தியமுனிவன். |
அகத்தை | தாய். |
அகநகர் | கோட்டைக்குள்ளடங்கிய நகரப்பகுதி |
அகநகை | இகழ்ச்சி நகை |
அகநகைத்தல் | இகழ்ச்சி நகைசெய்தல். |
அகநாடகம் | அகக்கூத்து. |
அகநாடு | உள்நாடு |
அகநிலைக்குறிஞ்சி | சாதிப் பெரும்பண்வகை |
அகநிலைச்செவ்வழி | அகநிலைக்குறிஞ்சி |
அகநிலைப்பாலை | ஒருபண். |
அகப்படல் | அகப்படுதல். |
அகப்பட்டி | சுருங்கியபட்டி |
அகப்பட்டியாவார் | இஷ்டம்போன்றுநடப்பவர். |
அகப்புறப்பொருள் | அகப்புறத்திணை. |
அகப்பூ | இதயகமலம் |
அகப்பொருட்கோவை | அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம் |
அகமலர்ச்சி | அகமகிழ்ச்சி |
அகமுகம் | உண்முகம் |
அகமுடையாள் | வீட்டுக்குடையவள் |