அ - வரிசை 87 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகடச்சக்கரம் | உதரபந்தனம் என்னும் ஓர் அணி |
அகடிதகடநா | மாயாகாரியஞ்செய்தல். |
அகடூரி | பாம்பு |
அகட்டுத்தே | ஆனைமுகன் |
அகணித பஞ்சாங்கம் | அலகிடாதுசொல்லும் பஞ்சாங்கம். |
அகணிதபஞ்சாங்கி | கணியாதபஞ்சாங்கஞ்சொல்வோன். |
அகண் | அருகு |
அகண்டஞானம் | பரிபூரணஞானம். |
அகண்டவடிவம் | நீக்கமற்றசொரூபம். |
அகண்டவாக்கியம் | விட்டும் விடாதவிலக்கணை. |
அகண்டாகண்டன் | பரப்பிரமம் |
அகண்டாகாரஞானம் | பரிபூரணஞாநம் |
அகண்டாகாரம் | விசாலம் |
அகண்டாகாரவிர்த்திஞானம் | பேரறிவு. |
அகண்டிதமூர்த்தி | கண்டிக்கப்படாதவடிவுடையோன். |
அகண்டித பூர்த்தி | கப்படிக்கப்படாதவடிவுடையோன். |
அகண்டிதன் | எங்கும் நிறைந்தவன். |
அகண்டிதாகாரம் | கண்டிக்கப்படாதவுருவம். |
அகதிகம் | உரைக்கப்படாதது. |
அகதேசி | உள்ளூரவன்/உள்ளூர்க்காரன் |