அ - வரிசை 86 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அஃகியஔ

ஔகாரக்குறுக்கம்.

அஃகியதனிநிலை

ஆய்தக்குறுக்கம்.

அஃகியமஃகான்

மகரக்குறுக்கம்.

அஃதான்று

அஃதல்லாமல்
அதுவுமன்றி

அஃதி

அஃதை.

அகக்கணு

உள்ளிருக்குங்கணு.

அகக்கமலம்

இதயதாமரை.

அகக்கரணம்

அந்தக்கரணம்.

அகக்காழன

உள்வைர மரங்கள்.

அகக்கூத்துக்கை

அகக்கூத்தில் காட்டும்கை.

அகங்கரம்

அகங்காரம்.

அகங்காரவிர்த்தி

நானென்னும்வடிவுஞானம்.

அகங்காரான்ம ஞானம்

அகங்காரமே ஆன்மாவெனக்கொள்ளும் அறிவு.

அகங்காரி

செருக்குடையவன்
கர்வி

அகங்காழ்

அகக்காழ்
உள் வைரம்

அகசன்

கேதுவெனுங் கோள்

அகசியக்காரன்

விதூஷகன்.

அகசியக்கூத்து

பகடிக்கூத்து.

அகச்சத்தாதுவித்தசமாதி

ஆறு சமாதிகளில் ஒன்று.

அகச்சுவை

நாடகரசத்தொன்று
ஞானம்
அகநெறிக்குரிய சுவை