அ - வரிசை 85 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அதாவதன்று

See அதான்று. (தொல்.எழுத்.258,உரை.)

அதான்று

அதுவல்லாமலும். (நன்.180.)

அல்லதேல்

அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.)

அல்லதை

அல்லாமல். (கலித்.9.)

அற்றேல்

அப்படியானால்.

அல்லாமல்

தவிர.
அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது.

அல்லால்

அல்லாமல். அஞ்சாமை யல்லால் (குறள்,497).

அசதியாடு

பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல்.
அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192).

அருளிப்பாடு

ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.).
உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51).

அள்ளிக்கொட்டு

பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது.
மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான்.
மிகக்கொடுத்தல்

அள்ளிக்கொண்டுபோதல்

வேகமாயோடுதல்

அன்றே

அல்லவா (தொல்.சொல்.282, சேனா.)

அகஸ்மாத்

திடீரென

அகப்பரம்

வெதிகை
திண்ணை

அகப்பற்று

பற்று

அகப்பா

மதிலுண்மேடை
மதில்
அகழ்/அகழி
அகத்திணைப் பாட்டு

அகப்பாட்டுவண்ணம்

முடியாது போன்றுமுடிவது.

அகப்பு

ஆழம்
தாழ்வு
படுகுழி

அகப்பேய்ச்சித்தன்

See சித்தன்

அஃகியஐ

ஐகாரக்குறுக்கம்.