அ - வரிசை 84 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகப்பக்கம்

See பக்கம்.

அகலிய

அகன்ற

அங்காமி

காயமல்லாத. அங்காமி குமஸ்தா (C.G.).

அசங்கியேயம்

எண்ணிறந்தது. அசங்கியேய கிரந்தம்.

அல்கா

இழிவான.

அருமந்த

அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7).
பிரியமான

அருமந்தன்ன

See அருமந்த. (தேவா.1214, 21.)

அயிந்தா

வருகிற. அயிந்தா பசலி. (C.G.)

அதனா

தாழ்ந்த. அதனா மனிதன்

அலாயிதா

தனி. (C.G.)

அவ்வோ

அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7).

அறவிய

அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91).

அவ்வல்

முதன்மையான். (P.T.L.)

அனைய

அத்தன்மையான. அனையசெய்கையால் (கம்பரா.பள்ளி.140).
ஒத்த. (கம்பரா.கையடை.7.)

அஃகுள்

அக்குள்
கக்கம்

அன்றிக்கே

See அன்றி. (ஈடு. அவ.)

அல்லதூஉம்

See அல்லாமலும். அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22).

அல்லாமலும்

மேலும்.

அன்றியும்

அல்லாமலும் (சிலப்.110. அரும்.)

அதவா

அல்லது. அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ (பாரத. பதினேழா. 232.)