அ - வரிசை 83 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அம்மோ

இரக்கக்குறிப்புச் சொல். (நாமதீப.)

அட்டம்

எட்டு. அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709,7)
சாதிக்காய்
குறுக்கு
பக்கம்
அட்டங்கால்

அஃகரம்

வெள்ளெருக்கு
கிரியை

அஃகான்

அ என்னும் முதல் எழுத்து
நுண்ணிதாகி
சுருங்கி

அஃகுல்லி

பிட்டு
உக்காரி என்னுஞ் சிற்றுண்டி

அஃபோதம்

(நிலாமுகி)நிலாமுகிப்புள்
சகோரம்

அகக்கடவுள்

உயிர்க்குள்ளிறைவன்
ஆன்மா

அகங்கரி

இறுமாக்க.

அகசு

பொழுது
பகல்
இராப்பகல் கொண்ட நாள்

அகச்சுட்டு

அ, இ and உ
எ-டு - அவன், இவன், உவன்
சொல்லில் முதனிலயாயமைந்து நிற்கும் சுட்டு

அகடம்

அநீதி
பொல்லாங்கு
கபடம்

அகடனம்

செய்யப்படாதது.
கேடு

அகடு

பொல்லாங்கு
உள்
நடு
வயிறு
"அகடுறயார்மாட்டும் நில்லாது செல்வம்".(நாலடி.)

அகணி

உள்
மருதநிலம்

அகணிதம்

கணக்கின்மை
மனக்கணிதம்

அகண்டம்

அபின்னம்
அகண்டன்
மண்விளக்கு
முள்ளில்லாதது

அகண்டிதம்

முழுமை
கூறுபடாதது
கண்டிப்பில்லாதது

அகத்திணை

அகத்துநிகழொழுக்கம்.
அகப்பொருள்
அகத்திணைப்புறம் as அகப்புறப் பொருள் or கைக்கிளையும் பெருந்திணையும்.

அகத்தியம்

ஓர் இலக்கண நூல்
அவசியம்
கட்டாயம்

அகத்தியன்

அகஸ்தியன்
குறுமுனி
அகத்தியர்குழம்பு
See குழம்பு