அ - வரிசை 82 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அழகிதழகிது | மிக தன்று. (கம்பரா.மூலபல.162.) |
அம்ம | கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278). |
அம்மம்ம | ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4). |
அம்மவோ | ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194). |
அம்மனே | ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3,28) |
அம்மனையோ | ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 760.) |
அம்மனோ | See அம்மனையோ. (திவ். இயற். திருவிருத். 36.) |
அம்மேயோ | ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 1271, உரை.) |
அம்மையோ | ஒரு வியப்புச்சொல். (கலித். 85, உரை.) |
அதெந்து | அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1). |
அந்தா | ஓர் அதிசயச்சொல். அந்தாவிவளயிராணி (கந்தபு. அசமுகிப். 17) |
அப்பப்ப | இரக்கம் அதிசயம் இவற்றின் குறிப்பு. |
அப்புது | பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) |
அச்சா | மிகநன்று. |
அவிதா | ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.) |
அஸ்து | விளையாட்டில் தடைக்குறிப்பு. |
அஸ்தூரி | விளையாட்டில் தடைக்குறிப்பு. (Prov.) |
அஆ | ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.) |
அல்லேலூயா | ஒரு தோத்திரச்சொல். |
அறையோ | முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10). |