அ - வரிசை 81 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவையிற்றின்

அவற்றின்.அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1).

அன்னவன்

அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3).
ஒத்தவன். (சீவ்க.1372.)

அன்னன்

அப்படிப்பட்டவன்.

அன்னான்

அன்னவன்.
அவன்.

அனையன்

அன்னவன். (கம்பரா.வனம்பு.38.)

அனை

அந்த
அனைநால்வகையும். (தொல்.பொ.245).

அஃகம்

அஃகம் சுருக்கேல் "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு"(ஔவை.)
தானியம்.

அஃகு

குறை

அஃகேனம்

மூன்று புள்ளி (ஃ) வடிவாக வரும் ஆயுத எழுத்து

அஃதே

அப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884).
நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்.59, மயிலை.)

அக்கட

ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32)
அவ்விடம்

அடா

அடா பித்த (இராமநா. சுந்தர. 27).
இகழ்வு வய்ப்புக்களின் குறிப்பு.

அடே

See அடா.

அடேயப்பா

ஆச்சரியக் குறிப்பு.

அப்பாடி

See அப்பாடா.

அம்மாடி

அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு.

அகோ

ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1).
வியப்பு

அந்தகோ

இரக்கச்சொல். அந்தகோவிது வருவதே யெனக்கு (வேதாரணி. பிரமசா. 22).

அம்மகோ

ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14)

அவுக்கவுக்கெனல்

விரைவுக்குறிப்பு.