அ - வரிசை 80 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அல்லியான் | நான்முகன் |
அறவாளன் | அறச்செயலுடையவன் |
அறன் | வேள்வி முதல்வன், அறக்கடவுள், இயமன் |
அறிவரன் | அறிவிற்சிறந்தவன் |
அற்புதன் | கடவுள், கண்ணாளன் |
அனகன் | அழகுள்ளவன், கடவுள் |
அக்கடா | ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல். |
அலக்கழி | தொந்தரவு கொடுத்தல். |
அப்சரஸ் | அழகி. |
அங்கலாய்ப்பு | மனதிற் குறைபட்டு வருந்துதல். |
அபயஹஸ்தம் | அடைக்கலக்கை |
அவகாஹம் | மனத்திற் பதிகை |
அவகாஹனஸ்நானம் | அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை |
அனர்ஹம் | தகுதியற்றது. |
அனன்னியார்ஹம் | வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது.(திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) |
அஹம் | நான். இவன் அஹமென்றால் ராவணாதிகள் நான் என்றாற்போலே பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டிறே யிருப்பது (ஈடு, 1, 2, 3). |
அவர்கள் | ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல். |
அனைவரும் | எல்லாரும். (கந்தபு.தெய்வ.261.) |
அவ் | அவை. (தொல்.சொல்.121.) |
அவ்வோன் | அவன். அவ்வோ னுயிருக் கழிவில்லை (பாரத.பதினெட்.111). |