அ - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அச்சு இயந்திரம் | நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம் |
அச்சுக்கட்டை | [செங்கல் போன்றவை தயாரிக்கப் பயன்படும்] அச்சு |
அச்சுக்கால் | ஆரக்கால் |
அச்சுக்கால் | மாட்டு வண்டில் சில்லின் அச்சினையும் அதன் வெளி வட்டத்தினையும் இணைக்கும் மரத்துண்டுகள். உ+ம்: அச்சுக்காலில நல்ல வன்ன வேலைப்பாடுகள் செய்து வண்டில் நல்ல வடிவாயிருக்கு. |
அச்சுக்குடம் | [இலங்]வண்டியின் பார் |
அச்சுக்குடம் | மாட்டுவண்டில் சில்லின் நடுவிலிருக்கும் வட்ட வடிவமான மரத்தாலான பகுதி. உ+ம்: அச்சுக்குடம் வெடிச்சுப் போச்சு. |
அச்சுக்கூடம் | அச்சகம் |
அச்சுக்கோ | [இயந்திரத்தின் மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்] உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அடுக்குதல் |
அச்சு நாடுகள் | இரண்டாம் உலகப்போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான் ஆகிய நாடுகள் |
அச்சுப்பிரதி | ஒரு நூல் முடிவாக அச்சேறுவதற்கு முன் திருத்தங்கள் இடும் படிவம்,மெய்ப்பு |
அச்சுப்பிழை | அச்சிடும்போது ஏற்படும் எழுத்து மாற்றம்,எழுத்து விடுபடுதல் ஆகிய தவறுகள் |
அச்சுப்பொறி | அச்சு இயந்திரம் |
அச்சுமரம் | ஆரக்கால் |
அச்சுவெல்லம் | அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லக்கட்டி |
அச்சுறுத்தல் | பயமுறுத்தல்,கலக்கமடையச் செய்தல் |
அச்சேற்று | அச்சிடுதல் |
அச்சேறு | அச்சிடப்படுதல் |
அச்சொட்டாக | [இலங்] அச்சாக,அச்சு அசல் |
அச்சொட்டாக | மிகவும் சரியாக |
அசக்கு | லேசாக அசைத்தல் |