அ - வரிசை 79 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அன்னோன்றி | பெலனற்றவன். |
அங்கணன் | சிவன். |
அங்கதன் | இலக்குவனின் மகன், வாலி மகன் |
அசன் | திருமால், சிவபிரான் |
அநீதம் | நீதியின்மை |
அநுக்கிரகம் | அருள் |
அதமம் | தீங்கு |
அதிகுணன் | சிறந்த குணமுள்ளவன், கடவுள் |
அதி | மிகு; மிகை |
அநாதன் | பற்றுக்கோடில்லாதவன், கடவுள் |
அபியுக்தன் | அறிஞன் |
அப்பர் | திருநாவுக்கரசர் |
அமூர்த்தன் | சிவன் |
அம்மையப்பர் | உமாபதி |
அரவிந்தன் | நான்முகன் |
அரவிந்தை | இலக்குமி |
அரன் | சிவன் |
அரிக்கரியார் | சிவன் |
அருணன் | சூரியன் |
அர்ச்சிதன் | பூசிக்கப்படுவோன் |