அ - வரிசை 78 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அறும்பு

கொடுமை, பஞ்சகாலம்.

அற்பரம்

மக்கட்படுக்கை.

அற்பருத்தம்

வாழை.

அற்பிதம்

காணிக்கை, பலி.

அனவரதம்

எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8).

அனாசாரம்

ஆசாரமின்மை.

அனாரதம்

எப்பொழுதும்.

அனாவிலன்

சுக்கிரன்.

அனிகம்

அனீகம்.

அனுகமனம்

கூடப்போதல்.

அனுகம்

கெஞ்சந்தனம்.

அனுக்கை

விடை.

அனுசன்

தம்பி.

அனுத்தம்

பொய்.

அனுபமம்

ஒப்பின்மை.

அன்னதாழை

அன்னாசி.

அன்னபேதி

ஒருமருந்து.

அன்னலார்

பெண்கள்.

அன்னவம்

கடல்.

அன்னோ

ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).
ஓர் அதிசயக்குறிப்பு.