அ - வரிசை 76 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவண் | அவ்விடம். |
அவதிகத்தம் | கடனுரை. |
அவத்திரியம் | ஆபத்து. |
அவந்திகை | அவந்தி, கிளி. |
அவப்பிரஞ்சம் | இழிசனர்மொழி. |
அவரசன் | தம்பி. |
அவரி | அவுரி. |
அவலேகனம் | நக்குதல். |
அவலை | கடுப்பு, காடு. |
அவளிகை | இடுதிரை. |
அவற்கம் | கஞ்சி. |
அவனி | பூமி |
அவாசியர் | ஞானிகள் தென்னாட்டார். |
அவாலுதார் | ஓரதிகாரி. |
அவிகசம் | குவிந்தது. |
அவிசுவாசம் | அசுவாசமின்மை. |
அவிஞ்சை | அவித்தை. |
அவிடி | திரைச்சீலை. |
அவிநாபாவம் | அசாதாரண தருமம். |
அவியாத்தி | அபிவியாத்தி. |