அ - வரிசை 75 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அலவாட்டு

வழக்கம்.

அலன்றல்

சாதல்.

அலாக்கு

தீங்கு
வேறான

அலாபு

சுரைக்கொடி.

அலிகம்

நெற்றி.

அலுக்குத்து

ஒருகாதணி.

அலுப்பினாத்தி

குண்டூசி.

அலுமாரி

பெட்டகம்

அலுமாரி

உடுபுடவைகள் போன்ற முக்கியமான பொருட்களை வைக்கப் பயன்படும் தட்டுக்களையும் கதவுகளையும் கொண்ட மரம் அல்லது உருக்கினால் செய்யப்பட்ட ஓர் வகை தளபாடம்

அலுவலுவெனல்

அலப்பல்.

அலுவா

ஒரு பலகாரம்.

அலைசோலி

அலைக்கழிவு.

அலைத்துவம்

மிகுதி.

அலைவாய்

கடல், திருச்செந்தூர்.

அலௌகிகம்

இலௌகிகமல்லாதது.

அல்லகண்டம்

துன்பம்.

அல்லம்

இஞ்சி.

அல்லிகம்

பேய்க்கும்மட்டி.

அல்லியாமரம்

படவுவலிக்குந்தண்டு.

அவக்கிரசம்

காடி.