அ - வரிசை 74 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அருச்சகன் | சம்பாத்தியகாரன். |
அருச்சனை | பூசனை. |
அருட்டு | எச்சரிப்பு. |
அருணவம் | கடல். |
அருநெல்லி | ஒருமரம். |
அருநெல்லி | அரநெல்லி |
அருப்பலம் | அனிச்சமரம். |
அருமலதி | ஒருபண். |
அரும்பாலை | ஓரிசை. |
அருளகம் | வெள்ளெருக்கு. |
அருளுறுதி | வேம்பு. |
அரேசகண்டு | கருணைக்கிழங்கு. |
அரேசிகம் | வாழைமரம். |
அரோ | ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1). |
அரோகம் | சுகம். |
அர்க்கியம் | அருக்கியம். |
அர்ச்சியம் | அருச்சியம். |
அலகரி | பெருக்கு. |
அலஞ்சரம் | நீர்ச்சாடி, மட்சாடி. |
அலந்தல் | செங்கத்தாரி. |