அ - வரிசை 73 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரக்கர் | அசுரர், இராட்சதர். |
அரட்டி | அச்சம். |
அரணியம் | காடு. |
அரணியா | காட்டுக்கருணை. |
அரபி | கடுக்காய், காடு. |
அரமனை | இராசமனை. |
அரயன் | அரசன். |
அராபதம் | போர், வண்டு. |
அரிசனம் | மஞ்சள். |
அரிச்சிகன் | சந்திரன். |
அரிடம் | கடுகுரோகிணி, வேம்பு. |
அரிணை | கள். |
அரிதகி | கடுக்காய்மரம். |
அரிமஞ்சரி | குப்பைமேனி. |
அரிவி | அரிகதிர். |
அரிவி | நெற்கதிர்ப் பிடி |
அரீடம் | கடுகு, கடுகுரோணி. |
அருகணி | பிரண்டைக்கொடி. |
அருகியரத்தம் | பூனைக்காலி. |
அருக்கு | தடங்கல். |