அ - வரிசை 70 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அந்திரக்கொடிச்சி

கெந்தகம்.

அந்திரம்

குடம்.

அந்திரவசனம்

கொட்டைப்பாக்கு.

அந்தில்

அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.)

அந்தேசம்

அந்தரிப்பு, அபலம்.

அபக்கியாதி

நிந்தை, பழி.

அபசெயம்

அவசயம்.

அபதேவதை

பைசாசம்.

அபரஞ்சி

புடமிட்டபொன்.

அபரிமாணம்

அளவில்லாதது.

அபரியந்தம்

மட்டற்றது.

அபவித்திரம்

அசுத்தம்.

அபாங்கம்

கடைக்கண், கடைக்கண்பார்வை, திலகம்.

அபாரணை

உண்ணாமை.

அபிட்டம்

இதம்.

அபிமுகம்

நேர்முகம், முகதா.

அபிரட்சை

கருவலட்சணம்.

அபிவியாத்தி

சருவவியாபகம்.

அபீரன்

இடையன்.

அபூதம்

அசுசி, இன்மை.