அ - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அங்குலம்

ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம்
விரல்

அங்குஸ்தான்

[தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க]நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை
பெருந்தாரா

அங்கே

அந்த இடத்தில்,அந்த இடத்துக்கு

அங்ஙனம்

அவ்வாறு
அவ்விடத்தில்
அவ்விதமாய்

அச்சகம்

அச்சுத் தொழில் நடைபெரும் இடம்

அச்சடி

அச்சிடு,எழுத்து படம் முதலியவற்றை அச்சுப்பொறி கொண்டு பதித்தல்

அச்சப்படு

பயப்படுதல்,அஞ்சுதல்

அச்சம்

பயம்

அச்சரக்கட்டை

அச்சரக்கூடு,தாயத்து

அச்சவாரம்

முன்பணம்,அச்சாரம்

அச்சாகு

அச்சிடப்படுதல்

அச்சாணி

சக்கரம் கழராமல் இருக்க வண்டியின் அச்சுமுனைகள் இரண்டிலும் செருகப்படும் இரும்பு முளை,கடையாணி

அச்சாரம்

முன்பணம்

அச்சாரம் போடு

எதிர்காலத்தில் தனக்குக் கிடைக்க விரும்பும் ஒன்றுக்குத்தேவையான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளைத் தற்போதே மேற்கொள்ளுதல்

அச்சாறு

ஊறுகாய்

அச்சானியம்

அபசகுணம்

அச்சிரத்தகடு

தாயத்தினுள் வைக்கப்படும் மந்திரிக்கப்பட்ட செப்புத் தகடு,யந்திரம்

அச்சு

அச்சிடுவதற்கான [பெரும்பாலும் உலோகத்தால் செய்த] எழுத்துஎண் முதலியன,அச்சிடுதல்

அச்சு

சீமெந்துக் கல் தயாரிக்கப் பயன்படும் இரும்பு அல்லது மர அச்சு. உ + ம்: கிணறு கட்டிறத்துக்கு வளைஞ்ச அச்சால் கல்லறுக்க வேணும்

அச்சு அசல்

சிறிதும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி