அ - வரிசை 69 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அத்தோ

அதிசயக் குறிப்பு.(பிங்.)
ஓர் இரக்கச்சொல்.

அநந்தரம்

மேல்.

அநவரதம்

எப்போழ்தும்.

அநாரதம்

எப்போழ்தும்.

அநாவிலன்

சுக்கிரன்.

அநிச்சை

இச்சையின்மை.

அநீகம்

அநிகம், ஒருபடைத்தொகை.

அநுகுணம்

ஏற்றது, அனுகூலமானது.

அநுசன்

தம்பி.

அநுதினம்

நாடோறும்.

அநுத்தம்

பொய்.

அநுநாதம்

எதிரொலி, ஒலி.

அநுலாபம்

கூறியதுகூறல்.

அந்தகம்

ஆமணக்கு, குருடு, ஒரு சன்னி நோய்.

அந்தக்கரணம்

உட்கரணம், மனம்.

அந்தராளம்

இடைக்காலம், கர்ப்பக்கிரகம், நடு.

அந்தரிந்திரியம்

அந்தக்கரணம்.

அந்தளம்

கவசம்.

அந்தன்

கடுக்காய், குருடன், சனி.

அந்தியபம்

இரேவதி, மீனராசி.