அ - வரிசை 68 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதுல்லியம் | ஒப்பின்மை. |
அதோமாயை | ஒருமாயை. |
அதோவாயு | அபானவாயு. |
அத்தகோரம் | நெல்லி. |
அத்தநாசம் | பொருளழிவு. |
அத்தவாளம் | உல்லாசம், காடு, போர்வை, வடகம். |
அத்தாணி | அரசிருக்கை, சபைகூடும்இடம். |
அத்திகோலம் | அழிஞ்சில். |
அத்தியட்சரம் | பிரணவம். |
அத்திரதர் | காற்றேரரசர். |
அத்திராசம் | பயமின்மை. |
அத்திரு | அரசமரம். |
அத்திலை | செருப்படை. |
அத்துகமானி | அரசமரம். |
அத்துகம் | ஆமணக்கு. |
அத்துச்சம் | கிரகங்களின் அதிகவுச்சம். |
அத்துணை | அவ்வளவு. |
அத்துமம் | அரத்தை. |
அத்துலாக்கி | கருஞ்சீரகம். |
அத்துவாக்காயம் | கருஞ்சீரகம். |