அ - வரிசை 65 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அஞ்ஞத்துவம் | அஞ்ஞானம் |
அடத்தி | வாசி |
அடத்தி | அடர்த்தி |
அடந்தாளம் | அடதாளம். |
அடவி | காடு |
அடாசனி | ஆரை, புளியாரை |
அடாணா | ஓரிராகம். |
அடாத்தியம் | அடாதது. |
அடிசில் | சோறு எனப்பொருள் தரும் சொல். அன்னம் சாதம், புற்கை எனவும் கூறலாம் |
அடுசிலைக்காரம் | செந்நாயுருவி. |
அடுத்தி | வட்டி வாசி. |
அட்சயம் | கேடின்மை |
அட்டணை | குறுக்கே |
அட்டாலம் | அட்டாலை |
அட்டிமை | ஓமம், சீரகம். |
அட்டில் | அடுக்களை |
அட்டுப்பு | காய்ச்சிய வுப்பு. |
அட்டோலகம் | ஆடம்பரம், ஒட்டோலகம். |
அணாப்பு | ஏய்க்கை |
அணிச்சை | நாகமல்லிகை. |