அ - வரிசை 64 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசுதந்தரம் | சுதந்தரமில்லாமை. |
அசுப்பு | உளவு, சடுதி. |
அசுமானகிரி | மேற்கட்டி. |
அசுரர் | அவுணர் |
அசுவசட்டிரம் | நெருஞ்சில். |
அசுழம் | நாய் |
அசூர் | சமூகம். |
அசேதனம் | அறிவின்மை. |
அச்சகாரம் | முன்பணம். |
அச்சணம் | அக்கணம். |
அச்சுவத்தம் | அரசமரம் |
அச்சுவம் | குதிரை |
அச்சுவினி | அசுபதி |
அச்சோ | ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43). |
அஸ்தாந்தரம் | பொக்கிஷம். |
அஞ்சலிகை | வௌவால் |
அஞ்சற்குளச்சி | குங்குமபாஷாணம். |
அஞ்சனாதேவி | அனுமனறாய். |
அஞ்சிக்கை | அச்சம் |
அஞ்சுகம் | கிளி. |