அ - வரிசை 62 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகிலாண்டம்

சருவலோகம்
அண்டம்

அகிலாண்டவல்லி

உமாதேவி
பார்வதி

அகுடம்

கடுகுரோகிணிப்பூண்டு

அகுட்டம்

மிளகு

அக்கராகாரம்

ஒருபூண்டு.

அக்கியாதம்

மறைவு.

அக்கிரசந்தானி

நமன்கணக்கு
உயிர்களுடைய நன்மை, தீமைகள் எழுதப்படும் எமனுடைய குறிப்பேடு

அக்கிரு

விரல்.

அக்கினிபூ

அக்கினிசன்மன், நீர்.

அக்கோ

ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.)
ஒரு அதிசயச்சொல்,இரக்கச்சொல்.

அங்கண்

அவ்விடம்
அழகிய இடம். அங்கண் விசும்பி னமரர் (நாலடி. 373) அங்கு. (திருக்கோ. 290,உரை.)

அங்கரங்கம்

உலகவின்பம்.

அங்காரவல்லி

குறிஞ்சா, சிறுதேக்கு.

அங்காளி

அங்காளம்மை.

அங்கிகாரம்

ஏற்றுக்கொள்ளுகை
அங்கீகாரஞ்செய்
அங்கிகரித்தல்

அங்கிடுதத்தி

நாடோடி
நிலைகெட்டவன்.

அங்கிடுதத்தி

நம்கத்தகாத நபர். உ-ம்: அந்த அங்கிடுதத்தியை சங்கத் தலைவராப் போட்டிருக்கினம்.

அங்குசபிசாரி

கொள்ளுப்பூண்டு
அங்குசவி
கொள்

அங்குசரோசனம்

கூகைநீறு.

அங்குசோலி

அறுகம்புல்லு(அறுகு)
ஓர்புல்