அ - வரிசை 61 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அனுமதி

சம்மதித்தல்
இசைவு

அனுமதிச்சீட்டு

ஒரு இடத்தில் ஒருவரை அனுமதிக்க அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் சீட்டு

அனுமானம்

ஊகம்
உய்த்துணர்வு

அனுமானி

ஓர் முடிவுக்கு வருதல்,உத்தேசமாகத் தீர்மானித்தல்

அனைத்து

எல்லாம்
அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34)
அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78)

அனைத்துண்ணி

தாவரம்,விலங்கு போன்ற எல்லாவற்றையும் உண்டு வாழும் உயிரினம்

அனைவர்

எண்ணப்படக்கூடியவர்களின் மொத்தம்

அகங்கை

உள்ளங்கை.

அகசியம்

ஆசியம்
வேடிக்கை
பகிடிக்கூத்து
ஏளனம்

அகடியம்

அநீதி.

அகண்டி

ஒருவாச்சியம்
இசைக்கருவி வகை

அகத்தியா

எட்டாத ஆழம்.
சமுத்திரம்
எட்டாமை

அகப்பகை

காமம்
குரோதம்
உலோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
அகம்(inside) + பகை
உட்பகை.

அகப்பத்தியம்

மனோவிரதம்
இணை விழைச்சிலாமை

அகரு

அகில்

அகர்முகம்

உதயகாலம்
வைகறை

அகலிடம்

நிலவுலகம்

அகன்றில்

ஆணன்றில்
ஆண் கவுஞ்சம்

அகாரி

இடி, இந்திரன், கடவுள்.
அகம்,அரி

அகிர்

அசர், தலைச்சுண்டு.