அ - வரிசை 60 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அனாமத்து

(பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கு உரிமை என்று தெரியாதது
பிரத்தியேகமான

அனிச்சம்

முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) குறிப்பிடப்படும் மென்மையான மலர்

அனுக்கிரகம்

அருள்,ஆசி

அனுகூலம்

நன்மை

அனுங்கு

முனகுதல்

அனுசரணை

உறுதுணை
உதவி
ஒத்தாசை

அனுசரி

பின்பற்று(தல்)
கடைபிடி(த்தல்)

அனுசரித்து

(ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்,கருத்தில் கொண்டு

அனுதாபப்படு

இரக்க உணர்வு கொள்ளுதல்

அனுதாபம்

இரக்கம்

அனுதாபி

ஆதரவு தருபவர்

அனுதினமும்

ஒவ்வொருநாளும்,தினந்தோறும்

அனுப்பு

(ஒன்றை அல்லது ஒருவரை)ஓரிடத்துக்குச் சென்றடையச் செய்தல்

அனுபந்தம்

பினினிணைப்பு,பிற்சேர்க்கை

அனுபல்லவி

கீர்த்தனையின் இரண்டாவது உறுப்பு

அனுபவசாலி

நிறைந்த அனுபவம் உள்ளவர்

அனுபவம்

பட்டறிவு

அனுபவி

உணர்ந்து மகிழ்தல்
ரசித்தல்

அனுபூதி

(ஆன்மீகத்தில்)அறிந்து அனுபவமாக மாறுதல்
அனுபவஞானம் (வேதா.சூ.)

அனுபோகம்

ஒருவர் தன் வசத்தில் இருக்கும் உடைமையை அனுபவிக்கும் உரிமை