அ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அங்கத்தவர் | அங்கத்தினர்,உறுப்பினர் |
அங்கத்துவம் | உறுப்புரிமை |
அவயவம் | உறுப்பு |
அங்கதம் | [இலக்கியம்,நாடகம் போன்றவற்றில்] நபர்களை பழக்கவழக்கங்களைக் கொண்டு கேலிக்கு உள்ளாக்கும் தொனி |
அங்கப்பிரதட்டை | அங்கப்பிரதட்சிணம், |
அங்கம் | உறுப்பு |
அங்கம் | ஊர்,யானை,கொடி,செங்கோல்,நாடு,குதிரை,மலை,மாலை,முரசு,ஆறு |
அங்கலாய் | மனக்குறையைத் தெரிவித்துப் புலம்புதல் |
அங்கவத்திரம் | [ஆண்கள் மேலாடையாகத் தோளில் போட்டுக் கொள்ளும்] அடுக்கடுக்கான மடிப்புகல் வைத்த நீண்ட துண்டு |
அங்கனம் | ஆக,அங்ஙனம்,அவ்வாறு,அவ்விதம் |
அங்காடி | கடைத்தொகுதி அல்லது சந்தை என்பதன் பண்டைத் தமிழ்ச்சொல். நாளங்காடி, அல்லங்காடி என இருவகைச் சந்தைகள் இலக்கியங்களிற் காணப்படுகின்றன். நாள் +அங்காடி பகற்சந்தை எனப் பொருள்படும். அல் என்பது இரவு. எனவே அல்லங்காடி இரவுச் சந்தையாகும் |
அங்கால் | அப்பால் |
அங்கி | நீண்ட மேலுடை |
அங்கீகரி | ஏற்றுக்கொள்ளுதல், ஒப்புதல் அளித்தல் |
அங்கீகாரம் | ஒப்புதல் |
அங்குசபாணி | அங்குசபாசதரன் |
அங்கு | அங்கே |
அங்குசம் | யானையைக் கட்டுப்படுத்த யானைப்பாகன் வைத்திருக்கும் வளைந்த முனையை உடைய நீளமான கம்பி |
அங்குமிங்கும் | அங்கங்கே,ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு |
அங்குரார்ப்பணம் | [விழா போன்றவற்றை] தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி |