அ - வரிசை 59 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அன்ன ஆகாரம் | உணவும் தொடர்புடைய பிறவும் |
அன்னக் கரண்டி | அன்னவெட்டி,(சோறு பரிமாறப் பயன்படுத்தும்)உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி |
அன்னமுன்னாப் பழம் | சீத்தாப்பழம் |
அன்னார் | முன்னர் குறிப்பிடப்பட்டவர் |
அன்னியில் | (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்,தவிர அன்றி |
அன்னை | தாய் |
அனங்கக வேதியியல் | (உயிருள்ள பொருள் அனைத்திலும் காணப்படும்)கரியை மூலக்கூறாகக் கொண்டிருக்காத கூட்டுப் பொருள் பற்றி விவரிக்கும் வேதியியல் பிரிவு |
அனந்தகோடி | எண்ணற்ற |
அனந்தம் | கணக்கிட முடியாதது,எல்லை அற்றது, முடிவு அற்றது |
அனர்த்தம் | தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள்,விபரீத அர்த்தம் |
அனல் | சூடு |
அனல் கக்கு | (பேச்சு பார்வை முதலியவற்றில்) கடும் கோபம் வெளிப்படுதல் |
அனல் காற்று | கோடைக் காலத்தில் தொடர்ந்து நிலவும் அதிக வெப்பமான காற்று |
அனல் பற | (விவாதம் முதலியன) மனத்தில் உறைக்கும் விதமாகவும் ஆவேசமூட்டுவதாகவும் இருத்தல் |
அனல் மின்நிலையம் | நிலக்கரியை அல்லது எண்ணெயை எரித்துப் பெறும் வெப்பச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் |
அனற்று | வாட்டுதல் ,தகித்தல் ,(வலி ,காய்ச்சல் மிகுதியால்)முனகுதல் |
அனாதரவு | உதவி அல்லது ஆதரவு அற்ற நிலை |
அனாதி | தொடக்கம் அல்லாதது |
அனாதி காலம் | மிகப் பழங்காலம் |
அனாதை | தாய் தந்தை,உறவினர்களை இழந்தவர் |