அ - வரிசை 58 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அறுப்பு | அறுவடை |
அறுப்பு | தொந்தரவு |
அறுப்புக்கூலி | பயிர் அறுவடை செய்பவர்களுக்கு அல்லது மரம் செங்கல் போன்றவற்றை அறுப்பவர்களுக்குத் தரப்படும் கூலி |
அறுபதாம் கல்யாணம் | (தம்பதிகளில் )கணவனுக்கு அறுபது வயது நிறைகிறபோது அவர்களுடைய பிள்ளைகளால் தம்பதிகளுக்கு ஒரு திருமணம் போலவே நடத்தப்படுகிற ஒரு சடங்கு |
அறுபது | பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் சொல் |
அறுவடை | தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல் |
அறுவை | 1.அறுத்துச் செய்யப்படும் மருத்துவம் 2.சலிப்பூட்டும் நபர் அல்லது செயல் |
அறை | கையால் வேகமாக முகத்தில் அடித்தல் |
அறைகூவல் | 1.(பொதுநலனுக்கு) ஒத்துழைக்குமாறு விடப்படும் ஓர் அழைப்பு 2.(திறமையை நிரூபிக்குமாறு விடப்படும்) சவால் |
அன்பர் | அன்பிற்கு உரியவர் |
அன்பளிப்பு | அன்பைத் தெரிவிக்கும் வகையில் கொடுக்கப்படும் பணம்,பொருள் போன்றவை,பரிசு |
அன்பு | பாசம் |
அன்புடன் | பிரியமுடன், பாசத்துடன், நேசத்துடன் |
அன்புள்ள | பாசமுள்ள,நேசமுள்ள,பிரியமுள்ள |
அன்மொழித்தொகை | தொகைச்சொல் அதன் விளக்கத்துக்கு உரியவரைச் சுட்டும் தொடராக ஆவது |
அன்றாட | தினசரி |
அன்றாடம் | ஒவ்வொரு நாளும் |
அன்றி | தவிர,தவிர்த்து,இல்லாமல் |
அன்று | (கடந்த காலத்தில்)குறிப்பிட்ட காலம் |
அன்றைய | குறிப்பிட்ட அந்த நாளில்/காலத்தில் நடைபெற்ற |