அ - வரிசை 57 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அறிவீனம் | முட்டாள்தனம் |
அறிவு | கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. |
அறிவுக்கொழுந்து | (பெரும்பாலும் கேலியாக)அறிவாளி |
அறிவுசார் சொத்துரிமை | தன்னுடைய கண்டுபிடிப்பு,படைப்பு போன்றவற்றில் தான் செலுத்திய அறிவுத்திறன் மீது ஒருவர் பெற்றிருக்கும் உரிமை |
அறிவுடைமை | ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கும் தன்மை |
அறிவுநினைவு | சுயநினைவு |
அறிவுரை | ஆலோசனை |
அறிவுறுத்து | (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்,பணித்தல் |
அறிவுஜீவி | சிந்தனையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர் |
அறு | (கயிறு,இழை போன்றவற்றை)துண்டாக்குதல்,வெட்டுதல் |
அறுக்கை | பாதுகாப்பு |
அறுகால் | (கதவின்) நிலை |
அறுகுறும்பு | (விளையாட்டுத்தனமான குறும்பு |
அறுகோணம் | ஆறு பக்கங்களை உடைய படம் |
அறுசுவை | கைப்பு |
அறுத்துக்கட்டு | (குறிப்பிட்ட சில சாதிகளில் கணவன் இறந்த பிறகு)மறுமணம் செய்து கொள்ளுதல்/கனவனோடு கொண்ட கருத்து வேற்றுமையால் தாலியைக் கழட்டித் தந்துவிட்டு வேறுமணம் செய்து கொள்ளல் |
அறுதி | (மாற்றமுடியாத)முடிவு, இறுதி |
அறுதி | ஆதனத்தை எழுதிக் கொடுத்துக் கடன் பெறும் ஒரு முறை |
அறுதிப் பெரும்பானமை | பிற கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை,தனிப்பெரும்பான்மை |
அறுதியிடு | வரையறுத்தல்,முடிவு செய்தல் |