அ - வரிசை 56 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அறாவிலை | நியாயமற்ற வகையில், விற்பவன் அதிக விலை சொல்லுதல் அல்லது வாங்குபவர் மிகக் குறைந்த விலை கேட்டல். |
அறி | தெரிந்துகொள் |
அறிக்கை | அறிவிப்பு |
அறிகுறி | இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ தெரிந்து கொள்ள உதவும் குறிப்பு,அடையாளம், |
அறிஞர் | படிப்பு சிந்தனை ஆகியவற்றின் மூலம் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருப்பவர் |
அறிமுகப்படுத்து | அறிமுகம் செய்,தன்னையோ பிறரையோ முன்னிற்பவரிடம் தெரிவிப்பது |
அறியா | அறிவு முதிர்ச்சி அடையாத,விவரம் தெரியாத |
அறியாமல் | ஒருவர் தான் செய்யும் காரியம் இன்னது என்று தெரியாமல்,தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்,அனிச்சையாக |
அறியாமை | அறிவு இல்லாமல் |
அறிவாளி | கூர்ந்த அறிவு உடையவர் |
அறிவி | பிறர் அறியச் செய்தல்,தெரிவித்தல் |
அறிவிக்கை | அரசு முறையாக வெளியிடும் தகவல் |
அறிவிப்பு | ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல் |
அறிவிப்புப் பலகை | (நிறுவனங்களில் அல்லது பொது இடங்களில்) அறிவிப்புத் தாங்கிய பலகை |
அறிவியல் | அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து, உண்மைகளை கண்டுபிடித்து, முறைப்படி நிறுவும் ஒரு துறை. |
அறிவியல் குறியீடு | மிக அதிக இலக்கங்களைக் கொண்ட எண்களை எளிதாக எழுதுவதற்காக அடுக்குக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறை |
அறிவியல் கூடம் | சோதனைக்கூடம் |
அறிவியல் பெயர் | ஒரு உயிரினத்தை அடையாளம் காண அதன் பேரினப் பெயரையும் சிற்றினப் பெயரையும் இணைத்து (அறிவியலாளர்கள்) சூட்டும் பெயர் |
அறிவியலாளர் | அறிவியலில் தேர்ச்சி பெற்றவர் அல்லது அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்பவர் |
அறிவிலி | அறிவு இல்லாதவர் |