அ - வரிசை 55 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அற்பம் | கேவலம்,கீழ்த்தரம்,மட்டம் |
அற்பாயுசு | குறைந்த வாழ்நாள் |
அற்புதம் | புதுமை |
அற்ற | இல்லாத என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் செர்ந்து பெயரடை ஆக்கும் இடச்சொல் |
அற்று | 'இல்லாமல்' என்ற பொருளில் பெயர்ச்சொல்லுடன் வினையடை ஆக்கும் இடைச்சொல் |
அற | பெயர்ச்சொல்லுடன் இணைந்து ;இல்லாமல்' என்னும் பொருளில் மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச்சொல் |
அறக்கட்டளை | (கல்வித்துறை,சமூகசேவை போன்றவற்றில்) பொது நலனை மேம்படுத்தும் செயல்களுக்காகத் தனி நபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு |
அறங்காவலர் | (கோயில் அறக்கட்டளை முதலியவற்றில்) நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர் |
அறநிலையத் துறை | இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் மாநில அரசுத் துறை |
அறநூல் | ஒருவர் தன்னுடைய அக புற வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல், தர்மசாஸ்திரம் |
அறப்போர் | அறப்போராட்டம்,அறவழியில் நடத்தும் போராட்டம் |
அறம்பாடு | (முற்காலத்தில்)ஒருவருக்குத் தீமை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடல்கள் இயற்றிப் பாடுதல் |
அறம்புறமாக | வாயில் வந்தபடி,ஒழுங்குமுறை இல்லாமல் |
அறம்புறமாக | விடயமொன்று தொடர்பான செயற்பாடுகள் மும்மரமாக மேற்கொள்ளப்படுதல், கண்டபடி பேசுதல், ஒழுங்கின்றி, அதிகமாக |
அறவழி | (போராட்டத்தில்)வன்முறையைத் தவிர்ப்பதை அறமாகக் கொண்ட முறை |
அறவிடு | (கடனை)வசூலித்தல் |
அறவியல் | தனிமனிதனின் நடத்தை,தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள உறவு ஆகியவற்றைக் குறித்த மதிப்பீடுகளைப் பற்றிய துறை |
அறவுரை | சமய அல்லது ஒழுக்க போதனை |
அறவே | முற்றிலும்,முழுவதும்(எதிர்மறை வினைகளோடு) சிறிதளவுகூட |
அறாவிலை | நியாயமற்றவிலை,அநியாய விலை |