அ - வரிசை 54 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அளப்பரிய | அளவிட முடியாத,சொல்ல முடியாத |
அளப்பு | கட்டுக்கதை |
அளவளாவு | மனம் விட்டு பேசுதல்,உரையாடுதல் |
அளவிடு | மதிப்பிடுதல் |
அளவீடு | 1.அளவு 2.அளவிடும் முறை |
அளவு | குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது |
அளவுகோல் | 1.ஒரு பொருளின் நீளம்,உயரம், அகலம் போன்றவற்றைக் கணக்கிடுவதற்கான அலகு குறிக்கப்பட்ட கோல் 2.ஒரு நிகழ்வின் தீவிரத்தைக் கணக்கிடுவதற்கு உரிய சாதனம் அல்லது அமைப்பு 3.ஒன்றில் காணப்படவேண்டிய அடிப்படைத் தரம் மற்றும் தன்மை |
அளவுச்சாப்பாடு | (உணவு விடுதிகளில்) குறிப்பிட்ட அளவில் தரப்படும் உணவும் அதற்குத் தரப்படும் உப உணவுகளும் |
அளவுத்திட்டம் | வரைபடத்தின் அளவுக்கும் வரைபடம் குறிப்பிடும் உண்மையான இடம் அல்லது பொருளின் அளவுக்கும் இடையெ உள்ள விகிதம் |
அளவுமானி | (வெப்பம்,அழுத்தம்,ஆழம்,அதிர்வு போன்றவற்றை)அளவிடப் பயன்படும் கருவி |
அளவை | அலகுகளைக் கொண்டு அளவு எடுக்கும் முறை |
அளவை இயல் | அறிவைப் பெறுவதற்கான வாதங்களை அடிப்படையாகக் கொண்ட வழி,தர்க்க சாஸ்திரம் |
அளாப்பு | குழப்புதல்,அழுகுணி ஆட்டம் ஆடுதல் |
அளாப்பு | (விளையாட்டுகளில்) நியமங்களின் படி நடக்காமல் அவற்றினை திரித்து கூறுவதும் தவறாக நடந்துவிட்டு சரியாகத்தான் நடந்ததாகவும் நிரூபிக்க முனைதல் |
அளாவு | (வானம் உலகு முதலிய சொற்களுடன் இணைந்து வரும்போது) தொடும் அளவுக்குப் போதல் |
அளி | வழங்குதல்,கொடுத்தல் |
அளை | (விரல்களால் அங்கும் இங்கும்) ஒதுக்குதல் |
அளை | ஆழமான கிடங்கு, எலி முதலியவற்றின் புற்று, கையால் தொடுதல் |
அற்பசொற்பம் | மிகவும் குறைவு,கொஞ்சனஞ்சம் |
அற்பத்தனம் | கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தல் |