அ - வரிசை 53 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அழுத்து | (ஒன்றை விசையுடன்)உள்நோக்கி அல்லது கீழ் நோக்கிப் போகச் செய்தல் |
அழுதுவடி | 1.அழுதுவழி 2.இயல்பான சுறுசுறுப்பு,இயக்கம் போன்றவை வெகுவாகக் குறைந்து காணப்படுதல்,பொலிவு இல்லாமல் இருத்தல் |
அழுந்த | (ஒன்றில்)பதியும்படியாக அல்லதுன்படியும்படியாக |
அழுந்து | உள்ளிறங்குதல் |
அழும்பு | பிடிவாதம்,வீம்பு |
அழை | கூப்பிடு |
அழைத்துக்கொள் | ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக் கொள்ளுதல் |
அழைப்பாணை | வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ சாட்சிகளையோ குறிப்பிட்ட நாளில் வரும்படி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு |
அழைப்பாளர் | (விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர்,பேராளர் |
அழைப்பிதழ் | ஒரு நிகழ்ச்சியை காண வருமாறு அல்லது கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளும் வகையில் ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள் |
அழைப்பு | 1.எழுத்து வடிவிலான அல்லது வாய்மொழி வடிவிலான வேண்டுகோள்,கூப்பிடுதல் |
அழைப்புப் போட்டி | அழைக்கப்படும் அணிகள் அல்லது வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டுப்போட்டி |
அழைப்புமணி | வீட்டுக்குள் இருப்பவருக்கு ஒருவர் தன் வரவைத் தெருவிக்க அல்லது ஒருவர் மற்றவரைத் தன் இடத்துக்கு வரவழைப்பதற்குப் பயன்படுத்தும் ஒலி எழுப்பக்கூடிய மின் சாதனம் |
அள்ளி | (இறை வீசு போன்ற வினைகளுடன்) மிகுதியாகை,வார் |
அள்ளியடித்து | பதறியடித்துக்கொண்டு |
அள்ளு | வாரி எடுத்தல்,முகந்து எடுத்தல் |
அள்ளு | அதிக சூட்டினால் அல்லது உறைப்பினால் வாய் அல்லது நாக்கு வெந்து போதல், ஒன்றுடன் உராய்வதனால் அல்லது அடிபடுவதனால் உடலில் தோற்பகுதி அல்லது பொருளொன்றின் மேற்பகுதி எடுபடல் |
அள்ளுப்படு | கூட்டமாகக் கூடுதல்,ஒன்று சேர்தல் |
அள்ளுப்படு | தொகையாக செல்லுதல் |
அளந்து பேசு | முறை அறிந்து அளவோடு பேசுதல் |