அ - வரிசை 52 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அழல்

நெருப்பு

அழற்சி

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்று சூடாகவும் இருக்கும் நிலை

அழி

இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
நாசமாதல்,உருவம் இழத்தல்

அழிச்சாட்டியம்

முரண்டு,பிடிவாதம்

அழிப்பான்

எழுதியதை அழிக்கப் பயன்வடும் ஒரு ரப்பர் துண்டு

அழிபாடு

ஒரு நிலப்பரப்பில் இருந்த அமைப்புகளின் சிதைந்த நிலை

அழிவு

நாசம்
சீர்குலைவு

அழு

(துன்பம்,வலி முதலியவற்றால்) கண்ணீர் விடுதல்

அழுக்கு

அசுத்தம்

அழுகல்

(பழம்,முட்டை முதலிய)பொருள்களின் தன்மை கெட்டுப்போன நிலை

அழுகல்

தரம் குறைந்த, அழகற்ற

அழுகல் பழக்கம்

தீய பழக்கம்

அழுகு

கெட்டுப்போதல்

அழுகுணி

1.அழுமூஞ்சி 2.(சிறுவர்கள் விளையாட்டில்)ஏமாற்றுதல்

அழுகை

கண்ணீர் விடுதல்

அழுங்கு

உடல் முழுதும் ஓடு போன்ற செதில்களைக் கொண்ட தனது நீண்ட நாக்கினால் எறும்பு கரையான் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும் பற்கள் இல்லாத ஒரு வகை விலங்கு

அழுத்தம்

நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்
உறுதி

அழுத்ததிருத்தம்

உறுதியோடு தெளிவாக/உறுதியோடு தெளிவான

அழுத்தமானி

அழுத்தத்தை அளவிடப் பயன்படும் ஒரு கருவி

அழுத்தி

வலியுறுத்தி