அ - வரிசை 51 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவிழ்த்துவிடு | கழட்டிவிடு,அளவுக்கு அதிகமாக (பெரும்பாலும் உண்மை அல்லாததை) வெளிப்படுத்துதல் |
அவுரி | நீல நிறச் சாயம் எடுக்கப் பயன்படும் சிறு இலைகளைக் கொண்டதும் பசுந்தாள் உரமாகப் பயன்படுவதுமான ஒரு வகைக் குத்துச் செடி |
அவை | 1.அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம் 2.குழு,கூட்டம் 3.அருகில் இல்லாத அஃறிணை பொருள்களைச் சுட்டும் பிரதிப் பெயர் |
அவை | அவர்கள், அவன், அவள், அவர் |
அவைக்குறிப்பு | கூட்டத்தில் நடந்த விவாதங்கள் ,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பு |
அவைத்தலைவர் | சபாநாயகர் |
அவை முன்னவர் | அவை நடவடிக்கைகளுக்கான நாள்,நேரம் முதலியவற்றை அவைத்தலைவருடன் கலந்து நிர்ணயிக்க நியமிக்கப்படும் ஆளுங்கட்சி உறுப்பினர் |
அவையடக்கம் | ஓர் அவையில் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை |
அழகன் | அழகிய தோற்றமுடையவன் |
அழகாக | சுலபமாக,எளிதாக |
அழகி | அழகிய தோற்றமுடையவள் |
அழகிய | அழகான,மனதைக் கவரக் கூடிய |
அழகியல் | அழகைப் பற்றிய கொள்கைகளும் கோட்பாடுகளும் |
அழகு | வனப்பு |
அழகுக்கலை | அழகுபடுத்தும் கலை |
அழகுகாட்டு | (நாக்கை நீட்டுதல்,முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கைகளால்)கேலி செய்தால்,பழித்துக் காட்டுதல் |
அழகுசாதனம் | ஒப்பனை செய்துகொள்வதற்கு வேண்டிய பொருள்கள் |
அழகுணர்ச்சி | ஓவியம்,சிற்பம் போன்ற கலைப் படைப்புகளை அல்லது இயற்கைக் காட்சிகளப் பார்த்து ரசிக்கும் உணர்வு |
அழகு நிலையம் | ஒப்பனை செய்யும் இடம் |
அழகுபார் | அலங்காரம்,வேலைப்படுகள் போன்றவற்றை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து அந்த அழகை ரசித்தல் |