அ - வரிசை 50 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவமரியாதைப்படுத்து | அவமதிக்கும் விதத்தில் அல்லது மரியாதை குறைவாக நடத்துதல் |
அவமானப்படு | மதிப்பு மரியாதை போன்றவை இழந்த நிலையை அடைதல் |
அவமானம் | மதிப்பு,மரியாதை ,கௌரவம் போன்றவை குறைவதால் ஏற்படும் இழிநிலை |
அவயம் | உடல் உறுப்பு |
அவர் | ஆண் பெண் இருபாலரையும் படர்க்கையில் குறிக்கும் சொல் |
அவரை | இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய சற்றுத் தடித்த பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட தட்டையான காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி |
அவரோகணம் | ஒரு ராகத்தின் ஸ்வரங்களை படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை |
அவல் | ஊறவைத்த நெல்லைச் சிறிது நேரம் உலரவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம் |
அவலட்சணம் | அழகின்மை |
அவலம் | வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை |
அவள் | பெண்ணைக் குறிப்பிட படர்க்கையில் பயன்படும் பிரதிப்பெயர் |
அவன் | ஆணைக் குறிப்பிட படர்க்கையில் பயன்படும் பிரதிப்பெயர் |
அவா | விருப்பம் |
அவாவு | விரும்புதல் |
அவி | வேகவைத்தல் |
அவிசாரி | விபச்சாரி(அபிசாரி) |
அவிசுவாசி | விசுவாசம் இல்லாதவன் |
அவித்தியம் | அஞ்ஞானம் |
அவியல் | 1.சில வகைக் காய்கறிகளை அவித்து சீரகம்,அரைத்த தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி 2.(ஒரே தரமாக அல்லாத) பலவற்றின் கலவை |
அவிழ் | பிரித்தல்,கழற்றுதல் |