அ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகழ்வாராய்ச்சி | பண்டை நாகரிகச் சின்னங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி |
அகழி | கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்பட்டு,நீர் நிரப்பப்பட்ட அமைப்பு |
அகற்று | நீக்குதல் |
அகன்ற | அகலமான,விசாலமான,விரிந்த |
அகாரணமாக | காரணம் இல்லாமல் |
அகாலம் | [இரவில்]உரிய நேரம் அல்லாத நேரம் |
அகிம்சை | அறவழி |
அகில் | வாசனைப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு வகை மரம் |
அகிலரூபன் | எல்லாமானோன் |
அகில | அனைத்து |
அகிலம் | உலகம் |
அங்கசன் | மன்மதன் |
அகோரம் | அருவருப்பான தோற்றம்,விகாரம்,ஒன்றின் மிகுதியான நிலையை உணர்த்தும் சொல் |
அகௌரவம் | அவமதிப்பு,அவமரியாதை |
அங்கக | கரிமப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் |
அங்ககீனம் | உறுப்புக்குறை,உடல் ஊனம் |
அங்கங்கே | தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு |
அங்க சாத்திரம் | உடல் அமைப்பு,உடலிலுள்ள மச்சம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரின் குணம் எதிர்காலம் முதலியவற்றைக் கணித்துக் கூறுவது |
அங்க சேட்டை | [பிறருக்கு எரிச்சலூட்டும் விதமாகவோ,கோமாளித்தனமாகவோ] உடல் உறுப்புகளை மிகையாக அசைக்கும் செய்கை |
அங்கணம் | [பழங்காலத்து வீடுகளில்]கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழிவான அமைப்பு |