அ - வரிசை 49 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவசரச்சட்டம்

நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறாத காலத்தில் குடியரசுத் தலைவராலோ மாநில ஆளுநராலோ அவசரத் தேவை காரணமாகப் பிறப்பிக்கப்படும் தற்காலிகச் சட்டம்

அவசரச் சிகிச்சைப் பிரிவு

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுபவருக்கு உடனடிச் சிகிச்சை வழங்கும் பிரிவு

அவசர நிலை

நாட்டின் ஒருமைப்பாடு குலையும் சூழ்நிலையைச் சமாளிக்க அல்லது இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு எல்லா அதிகாரங்களையும் மேற்கொள்ளும் நிலைமை

அவசரப்படு

ஒரு செயலில் வேகம் காட்டுதல்,பரபரப்புடன் நடந்துகொள்ளுதல்

அவசரப்படுத்து

விரைந்து முடிக்குமறு முடுக்குதல்,காலம் தாழ்த்தாமல் செயல் படத் தூண்டுதல்

அவசரம்

விரைவு
வேகம்
பரபரப்பு

அவசியம்

தேவை
முக்கியம்

அவதரி

தோன்றுதல்

அவதாரம்

ஏதேனும் ஒரு உருவத்தில் தெய்வம் எடுக்கும் பிறப்பு

அவதானம்

கூர்மையாகக் கவனித்தல்,கவனம்

அவதானம்

மிகவும் கவனமாக, கூர்மையாக கவனித்தல்

அவதானி

கவனித்தல்,கவனத்தில் கொள்ளுதல்

அவதி

துன்பம்

அவதிப்படு

துன்பப்படுதல்

அவதூறு

பழி
களங்கம்

அவநம்பிக்கை

நம்பிக்கையின்மை,சந்தேகம்

அவப்பெயர்

அவச்சொல்

அவமதி

இழிவுபடுத்துதல்

அவமதிப்பு

இழிவு,அவமரியாதை

அவமரியாதை

மரியாதைக் குறைவு,அவமதிப்பு