அ - வரிசை 48 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அலைக்கழி | பிரச்சினைகளால் )இழுபட்டுத் துன்புறுத்தல் |
அலைக்கழிப்பு | (அலைச்சல்,மனவேதனை, முடிவெடுக்க இயலாத சிக்கல் போன்றவற்றால் வரும்) துன்பம்,சிரமம் |
அலைச்சல் | (பல இடங்களுக்கும்)அலைவதால் ஏற்படும் சிரமம் |
அலைநீளம் | (ஒலி,ஒளி போன்றவற்றில்) அடுத்தடுத்த இரு அலைகளுக்கு இடைப்பட்ட தூரம் |
அலைபாய் | திரண்டு வருதல் |
அலையக் குலைய | பதற்றத்தோடு பரபரப்பாக |
அலையாத்திக் காடு | வெப்ப மண்டலப் பிரதேசங்களில்நன்னீரும் கடல்நீரும் கலக்கும் சதுப்புநிலங்களில் இருக்கும் காடு |
அலைவரிசை | ஒலிபரப்புக்காகவோ அல்லது ஒளிபரப்புக்காகவோ ஒரு விநாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்/மேற்குறிப்பிட்ட முறையில் ஒலிபரப்பும் அல்லது ஒளிபரப்பும் அமைப்பு |
அலைவு | இரு புள்ளிகளுக்கு இடையே ஒரு பொருளின் சீரான தொடர்ச்சியான அசைவு |
அலோகம் | திட,திரவ,வாயு ஆகிய மூன்று நிலைகளில் கானப்படுவதும் பளபளப்புத் தன்மை அற்றதும் உலோகம் அல்லாததும் ஆன தனிமம் |
அவ்வண்ணம் | அவ்வாறு,அப்படி |
அவ்வளவாக | குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு |
அவ்வளவு | எல்லா,அத்தனை |
அவ்வாறு | அப்படி,அந்த விதமாக,அந்த மாதிரி |
அவ்விடம் | அந்த இடம்,அங்கே |
அவகாசம் | (ஒரு வேலையைச் செய்து முடிக்க ஆகும்) நேரம் |
அவச்சொல் | பழி |
அவசம் | மனம் நிலைகொள்ளாத நிலை |
அவசரக்குடுக்கை | ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர் |
அவசரக்கோலம் | அவசரம் காரணமாகத் திருத்தமாகச் செய்ய முடியாத நிலை |