அ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அலட்டு | வருத்திக்கொள்ளுதல்,கவலைப்படுதல்,பெருமையடித்தல் |
அலம்பு | கழுவுதல் |
அலம்பு | கைகால், பாத்திரம், உடுப்பு முதலியவற்றைக் கழுவுதல் |
அலமாரி | பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் கதவுகளை உடையதுமான அமைப்பு |
அலர் | (பூ)மலர்தல் |
அலரிப்பூ | அரளிப்பூ |
அலவாங்கு | கடப்பாரை |
அலறல் | (பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல் |
அலறியடித்துக்கொண்டு | பதறிப்போய், பெரும் பதற்றத்துடன் |
அலறு | பயம்,வலி முதலியவற்றால் கூக்குரலிடுதல் |
அலாதி | தனித்தன்மை கொண்டதி,சிறப்பானது,வித்தியசமானது |
அலாரிப்பு | நாட்டியம் கற்பவர்களுக்கு முதல் பாடமான அடிப்படைச் சொற்களுக்கு ஏற்ப ஆடும் முறை |
அலி | அரவானி |
அலுகோசு | தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியர் |
அலுங்கு | லேசாக அசைதல் |
அலுப்பு | சலிப்பு |
அலுவல் | பணி |
அலுவலகம் | (தொழிற்கூடம் அல்லாத )வேலை பார்க்கும் இடம் |
அலுவலர் | அலுவலகத்தில் பணி புரிபவர் |
அலை | பல இடங்களுக்கு போதல் |