அ - வரிசை 46 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அல்லிவேர் | சல்லிவேர் |
அல்லிவேர் | சல்லிவேர், ஆரம்பவேர் |
அல்லும் பகலும் | இடைவிடாமல்,எப்போதும் |
அல்லோல கல்லோலம் | (பலர் இருக்கும் இடத்தில்)பெரும் பரபரப்பு,பெரும் குழப்பம் |
அல்வா | ஊற வைத்த கோதுமையை அரைத்துப் பிழிந்து எடுத்த பாலைச் சர்க்கரையுடன் சேர்த்துக் கிளறித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம் |
அலக்கு | துறட்டி |
அலகு | அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும் |
அலங்க மலங்க | திருதிருவென்று |
அலங்கரி | அழகுபடுத்துதல் |
அலங்காரம் | அணி |
அலங்கார மீன் | அலங்காரத்திற்காகக் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் சிறிய மீன் |
அலங்காரி | சற்று மிகையாக அலங்காரம் செய்து கொள்ளும் பெண் |
அலங்கோலம் | சீர்குலைவு,தாறுமாறான தோற்றம் |
அலசல் | அடர்த்தியின்மை |
அலசு | (அழுக்கு நீங்குவதற்காக பாத்திரம் துணி போன்றவற்றை) நீரில் கழுவுதல் |
அலட்சியப்படுத்து | புறக்கணித்தல்,அவமதித்தல்,உதாசீனப்படுத்துதல் |
அலட்சியம் | புறக்கணிப்பு |
அலட்சியமாக | அநாயாசமாக |
அலட்டல் | மிகையாகக் காட்டிக்கொள்ளுதல் |
அலட்டல் | கேட்பவருக்கு முக்கியமற்ற விடயங்களை தொடர்ந்து கதைத்துக் கொண்டிருத்தல் |