அ - வரிசை 45 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரைமனது | (செயலில்) முழுமனதோடு இல்லாமை,ஆர்வம் இல்லாமை |
அரைமூடி | பெண் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவான உலோகத் தகடு |
அரையாண்டு | 1.மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்ட கல்வியாண்டில் இரண்டு பருவங்களைக் கொண்ட காலம் 2.வர்த்தக நிறுவனங்களில் ) ஆறு மாத காலம் |
அரையாப்பு | (பாலுறவுத் தொற்றின் காரணமாக)தொடை இடுக்குகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும், புண்ணாக மாறும் புடைப்பு |
அரையிறுதி | (பல சுற்றுகளாகப் பிரித்திருக்கும் விளையாட்டுப் போட்டியில்)இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற ஆடும் ஆட்டம் |
அரைவயிறு | (உணவு)பசியை ஓரளவுக்கு மடும் போக்கும் அலவுக்கானது |
அரைவேக்காடு | (காய்கறி,முட்டை முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை |
அல் | ஒரு கூற்றை அல்லது ஒரு நிலையை மறுத்தல் |
அல்குல் | பெண்குறி |
அல்பம் | அற்பம்,கேவலம்,கீழ்த்தரம்,மட்டம்,சாதாரணம்,குறைவு,கொஞ்சம் |
அல்பருவமுறை | (உயர் கல்வி நிறுவனங்களில் ) கல்வியாண்டின் இறுதியில் மட்டும் தேர்வு நடத்தும் வகையிலான பாடத்திட்டம் அமைந்த ஏற்பாடு |
அல்லது | ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல் |
அல்லரியல் | (நெய்த துணியைக் குறிக்கும் போது)நெருக்கமாக இல்லாதது |
அல்லரியல் | கண்ணறை |
அல்லல் | துன்பம் |
அல்லல்படு | சிரமத்துக்கு உளாதல் |
அல்லவா | தன்னோடு பேசுபவர் 'ஆமாம்' அல்லது 'இல்லை' என்று உறுதியாக விடை தரும் வகையில் பெரும்பாலும் ஒரு வாக்கியத்தின் இறுதியில் இணைக்கப்படும் ஒரு இடைச்சொல் |
அல்லாடு | (ஒன்றைச் செய்வதற்கு)திண்டாடுதல்,மல்லாடுதல் |
அல்லிப்பூ | அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய நீரில் வளரும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் பூ |
அல்லிவட்டம் | மலரில்(பெரும்பாலும்) வட்ட ஒழுங்கில் அமைந்திருக்கும் இதழ்களின் தொகுப்பு |