அ - வரிசை 44 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அருளாமல் | பிறர் அறியாமல், சத்தம் இல்லாமல் |
அருளாமல் | மற்றவர்களுக்கு தெரியாமல் |
அருளுரை | இறைத்தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள் பக்தர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு வழங்கும் அறிவுரை |
அரூபம் | உருவிலி |
அரூபி | ஒருவர் உருவம் அற்று இருக்கும் நிலை |
அரை | மாவாக்குதல் அல்லது கூழாக்குதல் |
அரை | நிலத்தில் தேய்படல், மெதுவாக நடத்தல், இடுப்பு |
அரைக்கண் | பாதி மூடிய கண்கள் |
அரைக்கால் | எட்டில் ஒரு பாகம் |
அரைக் கால் சட்டை | முழங்காலுக்குச் சற்று மேல் வரை வரும் கால்சட்டை |
அரைக் கிணறு தாண்டு | (முழுமையாகச் செய்ய்து முடிக்க வேண்டியதாக இருப்பதை) ஓரளவுக்கே செய்ய்து முடித்தல் |
அரைக் கிறுக்கு | (சராசரி இயல்புக்கு மாறாக)எரிச்சலை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது விநோதமாகவோ நடந்து கொள்ளும் நபர் |
அரைக்கீரை | தண்டையும்சிறு இலைகளையும் உடைய ,கிள்ளக் கிள்ளத் துளிர்க்கும் கீரை வகை |
அரைகுறை | (ஒன்றின்)முழுமையற்ற அல்லது முடிவு பெறாத நிலை |
அரைஞாண் | ஆண்களும் பெண்களும் இடுப்பில் கட்டியிருக்கும்(பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும்)கயிறு அல்லது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ செய்ய்த சங்கிலி |
அரை நிர்வாணம் | மிகக் குறைவான ஆடை அணிந்த நிலை |
அரைநெல்லி | (இரு வகை நெல்லிகளில்)சிறியதாகவும் புளிச்சுவை உடையதாகவும் இருக்கும் (மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்) உருண்டை வடிவக் காய் |
அரைப்புள்ளி | ஒரு வாக்கியத்தின்பகுதியாக அமையும் முழுமையான தொடர்களைப் பிரித்துக் காட்ட இடப்படும்( ; )என்னும் குறி |
அரைப் பைத்தியம் | அரைக்கிறுக்கு |
அரைமண்டி | உயரத்தைக் குறைத்துப் பாதி உட்கார்ந்தாற் போல் காலை வளைத்து நிற்கும் நிலை |