அ - வரிசை 43 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அருகு

குறைந்து,அண்மை,பக்கம்

அருங்காட்சியகம்

பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள்,அறிவியல் விளக்கப் பொறுள்கள் முதலியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம்

அருந்ததி

காண்பதற்கு அரிதான ஒரு நட்சத்திரம்

அருந்தப்பில்

மயிரிழையில்,அரும்பொட்டில்

அருந்து

குடித்தல்

அரும்

அரிய,எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும்

அரும்பதவுரை

(இலக்கண இலக்கிய நூல்களில்) கடினச் சொற்களுக்குத் தரப்படும் பொருள் விளக்கம்

அரும்பாடுபடு

பெரு முயற்சி செய்தல்

அரும்பு

தோன்றுதல்
துளிர்த்தல்
முளைத்தல்
அரும்பும் சூழ்நிலை

அரும்பு மீசை

(விடலைப் பையன்களின்) சிறு கோடு போன்ற மீசை

அருமருந்து

(குறிப்பிட்ட நோய்க்கு) மிகச் சிறந்த மருந்து

அருமை

அபூர்வம்
பெருமை. (திவா.)
பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31).
எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.)
இன்மை. (குறள், 7, உரை.)

அருமை பெருமை

(இதுவரை கவனிக்கப்படாத)சிறப்பும் மேன்மையும்

அருவம்

உருவம் அற்றது,

அருவரு

(அசுத்தம் ஆபாசம் முதலியவற்றால்) வெறுப்பு அடைதல்

அருவருப்பு

(அசுத்தம் ஆபாசம் முதலியன ) ஏற்படுத்தும் வெறுப்பு

அருவி

குன்று மலை போன்றவற்றின் மேலிருந்து நீர் வேகத்துடன் விழும் இயற்கை அமைப்பு

அருள்

தருதல்
வழங்குதல்
இயற்றுதல்
கூறுதல்
கருணை

அருள்மிகு

தெய்வத்தன்மை மிகுந்த,கருணை வாய்ந்த

அருள்வாக்கு

(தனக்கு இருக்கும் சித்தியைப் பயன்படுத்தி ஒருவர் கூறுவதாகக் கருதப்படும்) எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு