அ - வரிசை 42 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரிப்புக்கூடை

கீரை போன்றவற்றை அலச அல்லது தானியத்தில் இருந்து சேறு முதலியனவற்றை நீக்கப் பயன்படுத்தும் ஒரு வகைச் சிறிய கூடை

அரிய

அபூர்வமான,பலரும் அறியாத
அருமையான.

அரியண்டம்

தொல்லை,அசிங்கம்,அருவருப்பானது

அரியண்டம்

அருவருக்கத்தக்கது, தொல்லை

அரியணை

(அவையில்) அரசன் அல்லது அரசி உட்காரும் அலங்கார இருக்கை

அரியதரம்

சர்க்கரை சேர்த்த அரிசி மாவில் தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசைந்து எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை இனிப்புப் பண்டம்

அரியாசனம்

அரியணை

அரிவரி

ஆரம்ப வகுப்பு

அரிவரி

முன்னர் முதலாம் வகுப்பைக் குறிப்பிடும் முறை

அரிவாள்

வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி

அரிவாள்மனை

(காய்கறி முதலியன அரியப் பயன்படுத்தும்) உ போன்று வளைந்த தகட்டைக் கொண்ட சமையல் அறைச் சாதனம்

அரிவாள் மூக்கன்

அரிவாள் போன்று நீண்டு வலைந்த அலகையும் வெள்ளை நிறத்தில் உடலையும் கொண்ட நீர்ப்பறவை

அரிவிவெட்டு

கதிர் அறுத்தல்,அறுவடை

அருக்காட்டு

வேடிக்கை காட்டுதல்

அருக்குக்காட்டுதல்

பந்தா பண்ணூதல்

அருகதை

தகுதி,யோக்கியதை

அருகம்புல்

ஒருவகை புல் (வழிபாட்டுக்கு அல்லது மருந்தாகப் பயன்படுவது)

அருகரிசி

திருமணச் சடங்கில் மணமக்கள் மீது உற்றாரும் உறவினரும் தூவும் அருகம்புல் கலந்த அட்சதை

அருகாமை

சமீபம்,அண்மை

அருகால்

நிலையின் வலது அல்லது இடது பக்க மரம்