அ - வரிசை 41 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரவம் | பாம்பு |
அரவானி | உடல் அமைப்பைக் கொண்டு ஆண் என்றோ பெண் என்றோ விவரிக்க முடியாத நபர் |
அரவை | அரைத்தல் |
அரள் | மிரட்சி அடைதல் |
அரளி | கருஞ்சிவப்பு,இளஞ்சிவப்பு,மஞ்சள்,வெள்ளை போன்ற நிறங்களில் பூக்கும் பூ அல்லது அப்பூவைத் தரும் குறுகிய நீண்ட இலைகளை உடைய செடி |
அரளைபெய் | புத்தி பேதலித்தல் |
அரற்று | புலம்பி அழுதல் |
அராவு | ஒரு பரப்பை வழவழப்பாக்க அல்லது கூராக்க அரத்தால் தேய்த்தல் |
அராஜகம் | அரசியல் குழப்பம் |
அரி | வெட்டுதல் அறுத்தல் |
அரி | அழகு |
அரிக்கன் | 1.குள்ளம் 2.(அரிசி போன்ற தானியங்களை களையப் பயன்படுத்து) உட்புறம் கோடுகள் போன்ற கீறல்களைக் கொண்டதும் மண் உலோகம் போன்றவற்றால் ஆனதுமான சட்டி 3.காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு |
அரிக்கன் | வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறம், அரிக்கன் சட்டி, அரிசி போன்ற தானியங்களை சமைக்க முன்னர் அவற்றிலிருந்து கற்களை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஓர் விசேட சட்டி |
அரிச்சுவடி | 1.எழுத்துக்களையும் சில சொற்களையும், எண்களையும் கொண்ட ஆரம்பப் பாட நூல் 2.ஒரு துறையில் ஒருவர் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது,பாலபாடம் |
அரிசி | (உண்வாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட)நெல்லின் மணி |
அரிசிக்குறுனல் | அரிசி நொய்,அரிசிக் குறுணை |
அரித்தட்டு | சல்லடை |
அரிதாரம் | (நாடகக் கலைஞர் போன்றோர்) செய்துகொள்ளும் ஒப்பனை/அந்த ஒப்பனைக்குப் பயன்படும் ஒரு வகைப் பொடி |
அரிது | அபூர்வம் |
அரிப்பு | 1.அரிக்கப்படுவதால் ஏற்படும் சேதம்,சிதைவு 2.(உடம்பில் ஏற்படும்) நமைச்சல் |