அ - வரிசை 40 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரசு மரியாதை

காவல்த்துறையினர் அணிவகுத்து அரசு சார்பில் செலுத்தும் அஞ்சலி

அரசுமுறை

அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் அல்லது ஏற்பாடு செய்யும்

அரசுரிமை

நாட்டை ஆளுகிற உரிமை

அரசு வழக்கறிஞர்

அரசு தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்

அரசோச்சு

அரசாளுதல்

அரட்டு

பிறரைப் பயமுறுத்தும் விததில் சத்தமாகப் பேசுதல்
(வளவளவென்று பேசுதல்
(ஒருவரை போகுமாறு) விரட்டுதல்
விழிக்கச் செய்தல்,எழுப்புதல்

அரட்டை

பொழுதுபோக்க மற்றவருடன் பேசும் பேச்சு

அரண்

(பாதுகாப்பிற்குப் பயன்படும்) மதில் தடுப்பு போன்ற அமைப்பு

அரண்செய்

வலு சேர்த்தல்,

அரண்மனை

அரசன் அல்லது அரசி வகிக்கும் மாளிகை
அரண் என்பது பாதுகாப்பு. மனை என்றால் வீடு. எனவே பாதுகாப்பான இல்லம் என்பது கருத்து.பொதுவாக இத்தகைய இல்லம் அரசருடையதாக இருப்பதால் அரசருடைய மாளிகையே அரண்மனை எனக் கருதப் படுகிறது. அரன்மனை அல்லது அரமனை என்று வழங்கப்படும் சொல் அரசருடைய இல்லம் அல்லது இறைவனுடைய இல்லம் என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது.

அரணை

பழுப்பும் கரும் பச்சையும் கலந்த நிறத்தில் பளபளப்பான உடலைக் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி

அரணை புத்தி

செய்ய நினைத்தது சட்டென்று மறந்துவிடும் தன்மை

அரணையன்

நினைவுத் திறன் குறைவாக உள்ள ஆண்

அரதப்பழசு

நுடுங்காலமக அல்லது தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் பழையதாகிப் போனது

அரப்பு

இலுப்பைக் கொட்டையை அரைத்து எண்ணெய் எடுத்த பின் எஞ்சும் பிண்ணாக்கு

அரபி எண்

அரபி இலக்கம்,(0,1,2,3,4..)போன்ற குறியீடுகளைக் கொண்ட எண்முறை

அரம்

(இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும்)முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளைக் கொண்ட இரும்பால் ஆன சிறு கருவி

அரம்பையர்

தேவலோகப் பெண்கள்

அரவனை

(ஆதரவோடு ) அணைத்தல்

அரவணைப்பு

பாதுகாப்பு,ஆதரவு