அ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகரமுதலி | ஒரு மொழியில் அல்லது ஒரு துறையில் பொருளுடைய சொற்களை அல்லது குறியீடுகளை வரிசைப்படுத்திப் பொருள் கூறும் நூல் |
அகரவரிசை | ஒரு மொழியில் எழுத்துக்கள் அமைந்துள்ள வரிசையின் அடிப்படையில் சொற்களை வரிசைப் படுத்தும் முறை |
அகரவரிசைப்படுத்து | [ஒரு மொழியில் உள்ள] சொற்கள் பெயர்கள் போன்றவற்றை அகரவரிசைப்படி வரிசைப்படுத்துதல் |
அகராதி | அகரமுதலி |
அகராதி பிடித்தவன் | பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்,திமிர் பிடித்தவன் |
அகராதியியல் | அகராதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த துறை |
அகல் | குறிப்பிட்ட இடத்தில் இருந்து நகர்தல்,விலகுதல்,நீங்குதல்,விரிதல்,[மண் அல்லது |
அகலவுரை | விருத்தியுரை |
அகல | பெரிதாக,நன்றாக விரிந்து இருக்கும் படி, |
அகலக்கால் வை | விளைவுகளை யோசிக்காமல் சக்திக்கு மீறிய செயல்களில் இறங்குதல் |
அகலப்படுத்து | அகலத்தைக் கூட்டுதல்,அகலமாக்குதல் |
அகலம் | [நீளம் அல்லது உயரம் உள்ள ஒன்றில்] இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம் |
அகல ரயில்பாதை | இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில்] 1.676 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்படும் இருப்புப் பாதை |
அகலி | ஒன்றின் பரப்பை பெரிதாக்குதல்,அகலமாக்குதல் |
அகவயம் | [தன்னை அறிந்துகொள்ளும்] உள்நோக்கு |
அகவல் | தமிழ் இலக்கியத்தில் நான்கு பாடல் வகைகளில் ஒன்று |
அகவிலைப்படி | விலைவாசி ஏற்றத்தைச் சரிக்கட்ட அடிப்படை ஊதியத்தின் வீதமாக ஊதியத்தோடு கொடுக்கப்படும் கூடுதல் தொகை |
அகவு | [மயில்] கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் |
அகவை | வயது |
அகழ் | [புதைந்து கிடக்கும் பொருளை அறிந்து கொள்ள அல்லது வெளியே கொண்டுவர] தோண்டுதல் |