அ - வரிசை 39 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரசாங்கம்

அரசு

அரசாட்சி

அரசனுடைய ஆளுகை,அரசன் நடத்தும் நிர்வாகம்

அரசாள்

ஆட்சிபுரிதல்

அரசி

பட்டத்து ராணி

அரசிதழ்

அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வமான ஏடு

அரசியல்

ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்

அரசியல் கைதி

அரசியல் போராட்டங்கலில் இடுபட்டு கைது செய்யப்பட்ட நபர்

அரசியல் சட்டம்

அரசின் அமைப்பு குடிமக்களின் உரிமை,அரசின் கடமை,அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படைச் சட்டம்

அரசியல் சாசனம்

அரசியல் சட்டம்

அரசியல் நோக்கர்

அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக் கருத்துக் கூறுபவர்

அரசியல் யாப்பு

அரசியல் சட்டம்

அரசியலாக்கு

பொதுப் பிரச்சினையைத் தன் அரசியல் ஆதாயத்திற்குத் திரித்தல்

அரசிலை

அரைமூடி,பெண் குழந்தைகளின் அரைஞாணில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவிலான உலோகத் தகடு

அரசிலைப் பஞ்சாயுதம்

சங்கு,சக்கரம்,கதை,கத்தி,வில் ஆகிய ஐந்து உருவங்கள் பொறித்த அரச இலை வடிவப் பதக்கம்

அரசிலைப் பஞ்சாயுதம்

அரசிலையின் வடிவத்தில் அமைந்த விஸ்ணுவின் ஐந்து ஆயுதங்கள் பொறிக்கப்பட்ட குழந்தைகள் ஆபரணம்

அரசிளங்குமரன்

ராஜகுமாரன்

அரசிளங்குமரி

ராஜகுமாரி

அரசு

ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அமைப்பு

அரசுடமை

அரசின் உடமையாக இருப்பது

அரசுத்துறை

அரசின் முதலீட்டில் சுயமாக இயங்கும் தொழில்களைக் கொண்ட துறை